இந்தியை கற்றுக்கொள்ள வந்த அனைவரையும் வரவேற்கிறோம். இது Learn Hindi through Tamil – Part 04 ஆகும். வழக்கமாக அனைவரும் கற்றுத் தரும் பாடம் அல்ல. இந்தப் பாடங்கள் அனைத்தும் கொஞ்சம் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து நம்முடைய வலைதளத்திலும் அல்லது ஆண்ட்ராய்டு செயலியிலும் இந்தி பாடங்களை கற்றுக் கொண்டே வாருங்கள். விரைவில் நீங்கள் எளிதாக இந்தி பேசுவதற்கு நாங்கள் உறுதியளிக்கிறோம்.
இதுவரை நீங்கள் மூன்று பதிவுகளில் மொத்தம் 13 உயிரெழுத்துகளில் 10-ம் 33 மெய்யெழுத்துகளில் 13-ம் ஆக மொத்தம் 23 எழுத்துகள் படித்துவிட்டீர்கள்.
ஒருவேளை படிக்காதவர்கள் கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்து படித்துக் கொள்ளுங்கள்.
Learn Hindi through Tamil Part 01
Learn Hindi through Tamil Part 02
Learn Hindi through Tamil Part 03
இந்தப் பகுதியில் மேலும் சில மெய் எழுத்துக்களை பார்க்க இருக்கிறோம். இதுவரை படித்த பாடங்கள் அனைத்தும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நீங்கள் உணர்ந்தீர்கள் என்றால் இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
ஏற்கனவே க வரிசையில் நான்கு எழுத்துக்கள் பார்த்தது போல இப்பொழுது ச்ச (cha) வரிசையில் நான்கு எழுத்துக்களை பார்ப்பீர்கள்.
च – cha நாம் தமிழில் ஒரு ச மட்டுமே உள்ளது, ஆனால் சார்லி என்ற சொல்லில் உள்ள ச்ச என்று உச்சரிக்க வேண்டும்.
छ – chcha மேற்கண்ட ச்ச உடன் ஹ சேர்தது உச்சரிக்க வேண்டும்.
ज – ja ஜ என்ற உச்சரிப்பு
झ – jha ஜ + ஹ (ஜ உடன் ஹ சேர்தது உச்சரிக்க வேண்டும்)
அதேபோல் ட வரிசையிலும் நான்கு எழுத்துக்கள் உள்ளன.
ट – தமிழில் உள்ள ட உச்சரிப்பு
ठ – ட்ட
ड – டாக்டர என்ற சொல்லில் இருக்கும் ட (da) உச்சரிப்பு.
ढ – ட(da) வுடன் ஹ சேர்த்து உச்சரிக்க வேண்டும்
கீழ்கண்ட எழுத்துக்கள் அனைத்தும் தமிழில் இருக்கக்கூடிய அதே உச்சரிப்பு.
ङ – ங
ञ – ஞ
व – வ
ह – ஹ
स – ஸ
ष – ஷ
श – ச
இதுவரை நீங்கள் 33 மெய் எழுத்துக்களில் 27 எழுத்துக்களை படித்து விட்டீர்கள். அடுத்த படத்தில் மீதமுள்ள ஆறு எழுத்துக்களை பார்ப்போம். இப்பொழுது சில வார்த்தகளைப் பார்ப்போம்.
वह (vah வக்) – he, she, it, that அவன், அவள், அது
यह (yah யக்) – He, she, it, that இவன், இவள், இது
ऊन (oon ஊன்) – wool கம்பளி
ऐनक (ainak ஐனக்) – spectacles மூக்குக் கண்ணாடி
नगर (nagar நகர்) – town நகரம்
ओस (os) – dew பனி
चार (chaar ச்சார்) – four நான்கு
टालना (taalana டால்னா) – avoid தவிர்க்க
डर (dar டர்) – fear பயம்
ढकना (dhakana டக்னா) – cover மூட
இந்தப் பாடங்கள் அனைத்தும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களால் முடிந்த சிறு அன்பளிப்பை வழங்கி ஆதரவு தாருங்கள். 8610924459 என்ற எண்ணில் Phonepe லோ அல்லது 8610924459@ybl என்ற UPI id லோ வழங்கவும். நன்றி.
Follow us: Facebook | YouTube | Twitter | Instagram | Telegram | Android app | Google News |
Spoken English course at ₹ 299 only, more details WhatsApp +918610924459