இந்தியை கற்றுக்கொள்ள வந்த அனைவரையும் வரவேற்கிறோம். இது Learn Hindi through Tamil – Part 02 ஆகும். வழக்கமாக அனைவரும் கற்றுத் தரும் பாடம் அல்ல. இந்தப் பாடங்கள் அனைத்தும் கொஞ்சம் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து நம்முடைய வலைதளத்திலும் அல்லது ஆண்ட்ராய்டு செயலியிலும் இந்தி பாடங்களை கற்றுக் கொண்டே வாருங்கள். விரைவில் நீங்கள் எளிதாக இந்தி பேசுவதற்கு நாங்கள் உறுதியளிக்கிறோம்.
முதல் பகுதியில் நாம் சில எழுத்துக்களை படித்திருக்கிறோம் அவை மீண்டும் உங்களுக்காக.
क – க
ज – ஜ
त – த
न – ந/ன
प – ப
म – ம
ण – ண
य – ய
र – ர
ल – ல
தமிழில் மெய்யெழுத்தை (ல்) மேலே புள்ளி வைத்து எழுதுவது போல இந்தியில் பின்வருமாறு அடிக்கோடு இட ( ल् ) வேண்டும் ஆனால் பெரும்பாலான இடங்களில் அப்படி எழுதுவது இல்லை. கடைசி எழுத்து நெடில் ஒலி வராவிட்டால் அந்த எழுத்தை மெய் எழுத்தாகவே படிக்க வேண்டும். உதராணமாக
कल – (கல்) – நாளை
जल – (ஜல்) – தண்ணீர்
नल – (நல்) – குழாய்
मल – (மல்) – அழுக்கு
पल – (பல்) – வினாடி
மேற்கண்ட வார்த்தைகளில் நாம் கடைசி எழுத்து மெய் எழுத்தாக எழுதவில்லை ஆனால் உச்சரிக்கும் போது மெய் எழுத்தாகவே உச்சரிக்க வேண்டும்.
कर – (கர்) – செய்
पर – (பர்) – மேல் / இறகு
मर – (மர்) – இற
तर – (தர்) – நனைய
रण – (ரண்) – யுத்தம்
नरम – (நரம்) – மிருதுவான
नमक – (நமக்) – உப்பு
जलन – (ஜலன்) – எரிச்சல், பொறாமை
नाम – (நாம்) – பெயர்
कलम – (கலம்) – பேனா
जन – (ஜன்) – மக்கள்
तन – (தன்) – உடல்
मन – (மன்) – மனம்
कण – (கண்) – துகள்
நீங்கள் இதுவரை இந்தியில் பத்து எழுத்துக்களும் சில வார்த்தைகளும் கற்றுக் கொண்டீர்கள்.

நாம் தமிழில் க பக்கத்தில் துணைக்கால் போடும்போது அது கா என்று மாறுகிறது. அதே போல இந்தியில் பின்வருமாறு..
क – க
का – கா
ल – ல
ला – லா
न – ந
ना – நா
य – ய
या – யா
काला – (காலா) – கருப்பு
काका – (காகா) – சித்தப்பா
नाना – (நானா) – தாத்தா
नाक – (நாக்) – மூக்கு
पान – (பான்) – வெற்றிலை
काम – (காம்) – வேலை
அடுத்த பகுதியில் இன்னும் சில எழுத்துகளையும் வார்த்தைகளையும் பார்ப்போம் கொஞ்சம் கொஞ்சமாக படிக்கும் பொழுது தான் உங்களுக்கு ஞாபகத்தில் இருந்து கொண்டே இருக்கும்.
Follow us: Facebook | YouTube | Twitter | Instagram | Telegram | Android app | Google News |
Spoken English course at ₹ 299 only, more details WhatsApp +918610924459