அவள் மிக அழகாக இருக்கிறாள்.
She is resplendent in a saree.
அவள் சேலையில் ஜொலிக்கிறாள்.
ஒருவரை அல்லது ஒன்றைப் பற்றி வரையறுக்கிறீர்கள் அல்லது அதன் நிலைமைய பற்றி நிகழகாலத்தில் சொல்கிறீர்கள் என்றால் பயன்படுத்த வேண்டும். I என்பதற்கு am -ம் He, she, it and third person singular subjects களுக்கு is -ம் மற்றவைகளுக்கு (We, they, you…) are -ம் பயன்படுத்த வேண்டும். for examples : I am a teacher, he is a doctor, you are a student, they are engineers.
நான் அவளை பார்க்கும் பொழுதெல்லாம்…
My heart leaps when I see her.
அவளைப் பார்க்கும்போது என் இதயம் துள்ளிப்பாயும்.
ஒருவரை நீங்கள் காதலிக்கும்பொழுது உங்கள் பார்வையில் அவள் மட்டுமே அழகாக தெரிவாள். அதற்கு நானும் விதிவிலக்கல்ல. ஒருவேளை என் நண்பன் அவளை சீரியஸாக காதலிக்க முயற்சி செய்து பிறகு ஒருவேளை……
Perhaps if he tries to marry her, It will be awkward.
ஒருவேளை அவன் அவளை திருமணம் செய்து கொள்ள முயற்சித்தால், அது மோசமாக இருக்கும்.
ஒரு விஷயம் நடந்தால் (அது எப்பொழுது நடக்கும் என்று தெரியாது) அதனை simple present tense-லும் அதனால் பிறகு நடக்கின்ற விஷயத்தை simple future tense-லும் சொல்ல வேண்டும். இங்கு Perhaps if he tries to marry her என்பதை simple present tense-லும் பிறகு அதனால் நடக்கும் விஷயத்தை It will be awkward நாம் simple future tense-லும் சொல்லியிருக்கிறோம்.
நண்பனாக இருந்தாலும் அவன் குடித்து இருந்தால் அவனிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் இல்லை என்றால் நாமும் குடித்து இருக்க வேண்டும்.
அதற்க்காக நான் குடிக்கவே மாட்டேன் என்று சொல்லவில்லை, ஆனால் அவ்வப்போது குடிப்பவன் I am not a teetotaler, but occasional drinker.
முதலில் நான் அவனை இங்கிருந்து விரைவாக வெளியேற வேண்டும்,
இல்லையென்றால் அவள் என்னை தவறாக நினைக்கலாம்.
ஒவ்வொரு முறையும் நான் குடிக்கும் நண்பரைச் சந்திக்கும் போது, நான் பயத்துடன் நடுங்குகிறேன்,
இப்பொழுது அவன்….
He has come home blind drunk.
அதிகமாக குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளான்.
ஒரு விஷயம் தற்பொழுது தான் நடந்து முடிந்துள்ளது என்றால் அதனை Present Perfect Tense சொல்லவேண்டும்.Formula : Subject + have/has + past participle + object
Drunken stupor குடிபோதையில் தூங்குவது (விழுந்துகிடப்பது)
அவள் இப்பொழுது போன் கால் செய்தால் என்ன சொல்வது என்று நினைத்தேன்?
திரும்பி மொபைலை பார்த்தேன், ________ is calling
ஒரு நல்ல பெயரை கமெண்ட் செய்யுங்கள் கதையில் வரும் காதலிக்கு பெயர் சூட்டிவிடலாம்

கதையோடு English…. தொடரும்
கதையோடு English – part – 04 : https://lifeneeye.com/spokeneng/kathaiyodu-english-part-04/
100 Days Spoken English course through WhatsApp
🕓 தினமும் 20 நிமிடங்கள் படித்தால் போதுமானது
🧏♂️ கதை வடிவில் பாடங்கள்
🤷♀️ எளிமையான இலக்கணம் பற்றி விளக்கங்கள்
📅 தினமும் தேர்வுகள்
👨👨👧👧 பயிற்சி செய்ய Telegram குரூப் சேட்
for more details contact : https://wa.me/918610924459