இன்று நாம் பார்க்கக்கூடிய வார்த்தை meeting (மீட்டிங்). எப்போதும் ஏதாவது ஒரு காரணத்திற்காக அது அலுவலக சார்ந்தோ அல்லது தனிப்பட்ட விஷயமோ எதுவாக இருந்தாலும் சரி யாராவது ஒருவரையோ அல்லது பலரையோ நாம் சந்திப்போம். அந்த மீட்டிங் என்ற வார்த்தையை வைத்து சில சொற்றொடர்களை நாம் இங்கு பார்ப்போம்.
I’m meeting
நான் சந்திக்கிறேன் (அதாவது நீங்கள் ஒருவரை சந்திக்க இருக்கிறீர்கள்)
I’m meeting with a client
நான் ஒரு வாடிக்கையாளருடன் சந்திக்கிறேன் (அதாவது நீங்கள் ஒரு வாடிக்கையாளருடன் சந்திக்க இருக்கிறீர்கள்)
I’m meeting a group of friends for dinner.
நான் நண்பர்கள் குழுவை இரவு உணவிற்கு சந்திக்கிறேன்.
இப்படியும் பின்வருமாறு சொல்லலாம்.
I am going to meet my friend.
நான் என் நண்பரை சந்திக்கப் போகிறேன்.
ஆனால் அதுவே நீங்கள் ஒரு மீட்டிங்கில் இப்பொழுது இருக்கிறீர்கள் என்று சொல்ல வேண்டுமெனில்
I’m in a meeting
நான் ஒரு கூட்டத்தில் இருக்கிறேன்.
மற்றொருவரின் மொபைலை நீங்க எடுத்து பேசும் பொழுது….(அவள் மீட்டிங்கில் இருந்தால்)
She’s in a meeting – I’ll ask her to call you back later.
அவள் ஒரு கூட்டத்தில் இருக்கிறாள் – நான் உன்னை பின்னர் அழைக்கும்படி அவளிடம் கேட்கிறேன்.
கூட்டம் எந்த நேரத்தில் ஆரம்பிக்கிறது என்று கேட்க….
What time is the meeting?
கூட்டம் எந்த நேரம்?
When is the meeting?
கூட்டம் எப்போது?
The meeting is going to happen here
கூட்டம் இங்கே நடக்கப்போகிறது
The meeting was held here.
கூட்டம் இங்கு நடைபெற்றது.
We are going to have a secret meeting.
நாங்கள் ஒரு ரகசிய சந்திப்பு நடத்தப் போகிறோம்.
அதுவே நடந்து முடிந்தது என்றால்….
We had a secret meeting.
நாங்கள் ஒரு ரகசிய சந்திப்பு நடத்தினோம்.
Is she attending the meeting?
அவர் கூட்டத்தில் கலந்து கொள்கிறாரா?
He didn’t attend the meeting.
அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
How soon will the meeting begin?
கூட்டம் எவ்வளவு விரைவில் தொடங்கும்?
We scheduled the meeting for Friday.
நாங்கள் கூட்டத்தை (நடத்த) வெள்ளிக்கிழமை திட்டமிட்டிருக்கிறோம்.
I liked him from our first meeting.
எங்கள் முதல் சந்திப்பிலிருந்து நான் அவரை விரும்பினேன்.
I’ll be in a meeting all morning—can you take my calls?
நான் எல்லா காலைப் பொழுதிலும் ஒரு கூட்டத்தில் இருப்பேன். நீங்கள் எனது அழைப்புகளை எடுக்க முடியுமா? (என்னுடைய தொலைபேசி அழைப்புகளை நீங்கள் எடுக்க முடியுமா செய்ய முடியுமா)
The issue will be discussed at the next board meeting.
இந்த பிரச்சினை அடுத்த வாரியக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
I’ve been looking forward to meeting you.
நான் உங்களை சந்திக்க எதிர்பார்த்திருக்கிறேன்.
The meeting will be held in the school hall.
கூட்டம் பள்ளி மண்டபத்தில் நடைபெறும்.
Meena wasn’t present at the meeting, was she?
கூட்டத்தில் மீனா இல்லை, இல்லையா?
At our first meeting I was nervous
எங்கள் முதல் கூட்டத்தில் நான் பதற்றமடைந்தேன்
This was only my second meeting with him.
இது அவருடனான எனது இரண்டாவது சந்திப்பு மட்டுமே.
I don’t know why the meeting was postponed.
கூட்டம் ஏன் ஒத்திவைக்கப்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை.
I’d like to fix a date for our next meeting.
எங்கள் அடுத்த சந்திப்புக்கான தேதியை சரிசெய்ய விரும்புகிறேன். (நம்முடைய அடுத்த சந்திப்பிற்கான தேதியை நான் இப்பொழுது பொருத்த செய்கிறேன் அதாவது திட்டமிட செய்கிறேன்.)
The Taj hotel is an ideal venue for conferences and business meetings.
தாஜ் ஹோட்டல் மாநாடுகள் மற்றும் வணிக கூட்டங்களுக்கு ஏற்ற இடமாகும்.
I got up early in order to attend the meeting.
கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நான் சீக்கிரம் எழுந்தேன்.
Have you told everyone where the meeting will be?
கூட்டம் இருக்கும் இடம் அனைவருக்கும் சொல்லியிருக்கிறீர்களா?
Have you told everyone when and where the meeting will be?
கூட்டம் எப்போது, எங்கு இருக்கும் என்று எல்லோரிடமும் சொல்லியிருக்கிறீர்களா?