Kathaiyodu English – Part 05
எதையும் அவளுக்கு தெரியமால் செய்ததில்லை. எதையும் மறைப்பதும்மில்லை. ஆகவே முதலில் அவனை ஜாக்கரதையாக வீட்டில் விட்டுவிட்டு பிறகு அவளிடத்தில் தெரிவித்துவிடலாம் என்று திடமான முடிவு எடுத்தேன்.
What are my plans for this evening?
இன்று மாலையில் எனக்கு என்ன பிளான்ஸ்?.. என்று யோசித்தேன்
Actually nothing
உண்மையில் எதுவும் இல்லை… என்று எனக்கு நானே பதிலளித்துக்கொண்டேன்
I took the key chain which she gave me as a keepsake
அவள் ஞாபகார்த்தமாக கொடுத்த சாவி வளையத்தை எடுத்தேன்.
keepsake – ஞாபகார்த்தப் பொருள்
ஜன்னல் வழிகாக பார்த்தேன் அவள் தெருவில் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டேன்.
என் நண்பனை பைகில் பின்னால் அமர வைத்துக்கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்து வீட்டை விட்டு வெளியே வந்தேன்.
அடுத்த நிமிடேம அவள் வீட்டிற்கு வெளியே வந்தாள்,
She scowled at me.
அவள் கோபத்துடன் என்னைப் பார்த்தாள்.
scowl – கோபத்துடன் எரிச்சலாக ஒன்றை அல்லது ஒருவைரப் பார்ப்பது
அந்த கோபமான பார்வைக்கு விளக்கம் தேவையே இல்லை என்பது உங்களுக்குப் புரியும்.
Whatever I say, you will get over it
நான் என்ன சொன்னாலும், நீங்கள் அதை மீறுவீர்கள், …. என்ற பார்வையில் அவள் என்னைப் பார்த்தாள்.
இருந்தாலும் என் நண்பனை தனியாக அனுப்ப மனமில்லாததால், ஒரு சிறு புன்னகையை அவளுக்கு தந்துவிட்டு நேராக அவன் வீட்டிற்க்கு வண்டியை செலுத்தினேன்.
காரணம்
I have some ideas to cope with her
அவளை சமாளிக்க எனக்கு சில யோசனைகள் உள்ளன.
When she starts sobbing, I will say, why don’t we go and have some pani puri
அவள் அழு ஆரம்பித்தாள், நான் சொல்வன், நாம ஏன் சென்று சில பானிபூரியை சாப்பிடக்கூடாது என்று கேட்பேன்.
sobbing – சத்தமாக அழுதல்
உடனே அவள் அழுகைய நிறுத்திவிட்டு
she nods
அவள் தலையாட்டுவாள்
nod – சம்தம் என்ற அர்த்தத்தில் தலையை பலமுறை மேலும் கீழுமாக அசைப்பது.
போகலாம் என்ற மெல்லிய புன்னகையுடன் என்னுடன் கிளம்பிவிடுவாள். இது தான் நான் வாடிக்கையாக செய்வது அவள் வருத்தப்படும் பொழுதெல்லாம் சூப் கடைக்கு செல்வோம்,
ஆனால் நாங்கள் வழக்கமாக செல்லும் பார்க் அருகில் இருந்த சூப் கடை இப்பொழுது…
That shop owner is preparing soup as watery now
அந்த கடை உரிமையாளர் இப்போது சூப்பைத் தண்ணீராகத் தயாரிக்கிறார்
watery – நிறைய அல்லது அதிக தண்ணீர் கொண்டவை:
ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அல்லது தற்பொழுது ட்ரெண்டிங் இல் உள்ள விஷயத்தை பேசுவதற்க்கு Present continuous tense -யை பயன்படுத்தலாம்.
என் நண்பனுடன் அந்த பார்க்கை கடக்கும் பொழுது தான் பார்த்தேன் அந்த இரு கடைகளும் “Today is closed” என்ற வாசகத்துடன் போர்டு தொங்கவிடப்பட்டிருந்ததை.
கதையோடு English…. தொடரும்