தற்பொழுது சமூக ஊடகங்களில் ரயில்வே அமைச்சகம் பகிர்ந்துள்ள ஒரு வீடியோவில் துத்ஸாகர் நீர்வீழ்ச்சிக்கு அருகே செல்லும் ரயிலின் அழகிய காட்சிகள் வைரலாகி வருகிறது, அதை பற்றி காண்போம்.
தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு நீர்வீழ்ச்சியில் அதிக அளவு தண்ணீர் விழ தொடங்கியதும் ஒரு ரயில் நடுப்பகுதியில் நிறுத்தப்படுவதைக் காணலாம். இந்த வீடியோவை ரயில்வே அமைச்சகம் பகிர்ந்துள்ளது, இதில் கோவாவின் துத்ஸாகர் நீர்வீழ்ச்சிக்கு அருகே செல்லும் ரயில் மந்தோவி ஆற்றில் ஏராளமான தண்ணீர் விழுவதால் நிறுத்தப்பட வேண்டியிருந்தது.
மேற்கு இந்தியாவில் பருவமழையில் அதிக மழைப்பொழிவின் போது, கோவாவை பெங்களூருவுடன் இணைக்கும் ரயில் பாதைக்கு அருகில் துத்ஸாகர் நீர்வீழ்ச்சி தெரியும். இந்த துத்ஸாகர் நீர்வீழ்ச்சியை ரயிலில் பயணிகள் பயணம் செய்யும் பொழுது காணலாம்.
துத்ஸாகர் நீர்வீழ்ச்சிக்கு அருகே செல்லும் ரயிலின் அழகிய காட்சிகள்
WATCH: A train passing through Doodhsagar waterfall in South Western Railway, halted due to heavy rainfall. @RailMinIndia pic.twitter.com/lrGbfPpYbd
— Prasar Bharati News Services पी.बी.एन.एस. (@PBNS_India) July 28, 2021
பகவான் மகாவீர் சரணாலயம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மொல்லெம் தேசிய பூங்காவில் அமைந்துள்ள துத்ஸாகர் நீர்வீழ்ச்சி பால் போன்று வெள்ளை நிறத்தில் அதிகமான தண்ணீரை கொட்டுகிறது. இவ்வழியாக செல்லும் ரயில் அதிக மழை மற்றும் அப்பகுதியில் குறைந்த பார்வை காரணமாக நிறுத்தப்பட்டது. துத்ஸாகர் நீர்வீழ்ச்சியைச் சுற்றியுள்ள பகுதியும் முழுவதும் அதிக பசுமையான நிறங்களால் காடுகளால் அமைந்துள்ளது.
துத்ஸாகர் நீர்வீழ்ச்சி கோவாவின் மண்டோவி ஆற்றில் அமைந்துள்ள நான்கு அடுக்கு நீர்வீழ்ச்சியாகும். இது பனாஜியிலிருந்து சாலை வழியாக சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ளது, இது பெல்காம்-வாஸ்கோ டா காமா ரயில் பாதையில் மட்கானுக்கு கிழக்கே 46 கி.மீ தொலைவிலும், பெலகாவிக்கு தெற்கே 80 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து கோவாவின் தலைநகரான பனாஜிக்கு செல்லும் பயணத்தில் மன்டோவி நதியால் துத்ஸாகர் நீர்வீழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது. அங்குதான் கர்நாடகாவிலிருந்து தோன்றிய மாண்டோவி நதி அரேபிய கடலைச் சந்தித்து அதன் நீண்ட பயணத்தை முடிக்கிறது.
இந்த நீர்வீழ்ச்சியை பற்றிக் கேள்விப்படாதவர்களுக்கு துத்ஸாகர் நீர்வீழ்ச்சி இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும், இது 310 மீட்டர் உயரத்தில் இருந்து நீர் விழுகிறது அது மட்டுமில்லாமல் அது சராசரியாக 30 மீட்டர் அகலம் கொண்டது.
இந்திய வானிலை ஆய்வுத் துறையைப் பொறுத்தவரை, கொங்கன் மற்றும் கோவாவின் சில பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு அதிக மழை பெய்யும் என்று அவர்கள் கணித்துள்ளனர். ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக அதிக மழை பெய்யக்கூடும் என்று ஐஎம்டி மேலும் கூறியது. ஐஎம்டியும் ஆரஞ்சு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மற்றொரு அழகிய ரயில் பயணத்தை அனுபவித்து இருக்கிறீர்களா?
Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram |Android app|