Viral Video: Woman Performs Squats By Lifting a Cylinder, Netizens Are Impressed | Watch
தனக்கு வைரஸ் வர வேண்டும் என்று யாரும் விரும்ப மாட்டார்கள் ஆனால் தன்னுடைய வீடியோ வைரல் ஆக வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள். ஏதாவது ஒரு வகையில் தன்னுடைய வீடியோ அல்லது புகைப்படம் வைரலாகி நாம் இணையத்தில் என்றாவது ஒரு நாள் பிரபலமாக வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவரின் மனதிலும் இருக்கிறது. அதற்கா ஒரு சிலர் விபரீத முயற்சிகளில் இறங்குகிறார்கள், ஒரு சிலர் காமெடியாக குறும்புத் தனமாக ஏதாவது செய்து பிரபலம் அடைகிறார்கள். அப்படி தான் சில நேரங்களில் வைரசை விட வீடியோ அதிகமாக இணையத்தில் வைரல் ஆகி பலபேரிகளின் மனதில் ஒட்டிக்கொள்கிறது.
கொரோனா காலத்தில் நமது உடல் செயல்பாடுகளை குறைவதால், நம் உடலை வலிமையாக வைத்திருக்க சரியான உடற்பயிற்சி வழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். கோவிட் -19 வந்ததிலிருந்து, ஜிம்கள் மற்றும் பூங்காக்கள் மூடப்பட்ட நிலையில் மக்கள் தங்கள் வீடுகளில் உடற்பயிற்சி செய்ய முயற்சிக்கின்றனர். இருப்பினும், ஜிம்மில் இருப்பதைப் போல வீட்டில் அதிகமான உபகரணங்கள் இல்லை என்றாலும். இதுபோன்ற சூழ்நிலையில், மக்கள் தங்கள் ஒர்க்அவுட் கருவிகளை தயாரிக்க வீட்டில் கிடைக்கும் கனமான பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள்.
அந்தவகையில் ஒரு சிலர் தான் தினந்தோறும் செய்கின்ற உடற்பயிற்சியை புதுவிதமாக முயற்சி செய்து அதை இணையத்தில் வீடியோவாக வெளியிட்டு பிரபலமாகிறார்கள். அப்படிப்பட்ட சில வீடியோக்களின் தொகுப்பை இப்போது நாம் காண்போம்.
Viral Video: Woman Performs Squats By Lifting a Cylinder
ஒரு பெண் சிவப்பு நிற சேலை அணிந்துகொண்டு தனது பயிற்சிக்கு சிலிண்டரைப் பயன்படுத்துவதைக் காணலாம். உடற்தகுதி ஆலோசகரான ஷெய்லி சிகாரா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
வீடியோ வெளியிட்டபிறகு வைரலாகி 36000 க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது, நெட்டிசன்களால் அவரது சூப்பர் வலிமை மற்றும் உடற்பயிற்சியில் ஈர்க்கப்பட்டனர். இன்ஸ்டாகிராமில் சுமார் மூன்று லட்சத்து 59 ஆயிரம் பேர் பாளோர்களை கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் ஒரு யூடியூப் சேனலும் உள்ளது, அங்கு அவர் தனது பயிற்சி வீடியோவை வழக்கமாக வெளியிடுகிறார்.
அவர் தொடர்ந்து இன்ஸ்டாகிராமிலும் வீடியோக்களை இடுகிறார். அவற்றில் சில இங்கே:
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram |