85 வயதில் பாட்டிக்கு டேட்டிங் செய்ய ஆசை – அதற்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
நியூயார்க்: உங்கள் வாழ்க்கையில் எந்த வயதிலும் அல்லது எந்த நிலையிலும் நீங்கள் அன்பைக் தேடலாம் என்று 85 வயதான இந்த பாட்டி அதற்கு ஒரு வாழ்க்கை உதாரணம். நியூயார்க்கைச் சேர்ந்த ஹட்டி ரெட்ரோஜ் என்ற 85 வயது பாட்டி, தனது 39 வயது காதலனிடமிருந்து பிரிந்த பிறகு டேட்டிங் செய்வதற்காக ஒரு அன்பைத் தேடுகிறார் . அவர் வாழ்கையில் சில வேடிக்கைகளைக் காண விரும்புவதால் Bumble எனப்படும் டேட்டிங் தளத்தில் ஒரு கணக்கை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்.
“நான் இப்போது யாருடனும் டேட்டிங் செய்யவில்லை. சில ஆண் நண்பர்களை சோஷியல் நெட் ஒர்க்கில் சந்தித்திருப்பதால், பம்பில் இடுகையிடுவேன். நான் இப்போது மீண்டும் டேட்டிங் செய்யத் தொடங்குவேன், நான் நெருக்கமாக இருக்க முடியும், மீண்டும் 85 வயதில் காதலிப்பதை அனுபவிக்கிறேன்!, என்று அவர் கூறுகிறார்.
85 வயதில் பாட்டிக்கு டேட்டிங் செய்ய ஆசை

ஹட்டி தனது 48 வயதில் விவாகரத்து பெற்றார், அதன் பின்னர், அவர் வயது குறைந்த இளம் ஆண்களை மட்டுமே காதலிக்கிறார். தனது குழந்தைகளை கல்லூரியில் சேர்ப்பதற்கு போதுமான அளவு உழைக்கவில்லை என்பதற்காக 1984 ஆம் ஆண்டில் தனது முன்னாள் கணவரிடமிருந்து பிரிந்தார்.
ஹட்டி தனது முன்னாள் காதலன் ஜானுடன் சேனல் 5 நிகழ்ச்சியான Age Gap Love 2018 இல் தோன்றியுள்ளார். “எங்கள் Age Gap Love டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றதற்குப் பிறகு நான் ஜானைப் பார்ப்பதை நிறுத்தினேன்.
டிண்டர் (Tinder) எனப்படும் ஆன்லைன் டேட்டிங் அப்ளிகேஷனை பயன்படுத்தி வந்த மூதாட்டி ஹட்டி ரெட்ரோஜ், வாரத்திற்கு 3 முறை இளம் வயதினருடன் வழக்கமாக டேட்டிங்கில் ஈடுபட்டு வந்திருக்கிறார். எனினும் அந்த ஆப்-ல் அவருடைய கணக்கு பிளாக் செய்யப்பட்டிருக்கிறது. அதன் பிறகு எந்தவொரு டேட்டிங் ஆப்களையும் அவர் பயன்படுத்தாமல் சில காலம் டேட்டிங் செய்யாமல் இருந்து வருகிறார். ஒருமுறை அவர் ஒரு செய்தித்தாளில் 35 வயதிற்குட்பட்ட ஆண்களுடன் டேட்டிங் செய்ய விரும்புவதாகக் கூறி ஒரு விளம்பரத்தை வைத்தார். அவர் கோரிக்கைகளை ஏற்று பலதரப்பட்ட ஆண்களிடமிருந்து கோரிக்கைகள் வந்து அது வெற்றிகரமாக மாறியது என்று அவர் வெளிப்படுத்தினார்.
ஹட்டி, “நேற்று காலை எனக்கு இஸ்ரேலில் ஒரு இளைஞனிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது, அவர் என்னிடம் ஒரு தீராக காதல் இருப்பதாக கூறினார்.
முன்னாள் நடனக் கலைஞரான ஹட்டி ரெட்ரோஜுக்கு இரண்டு குழந்தைகள் மற்றும் மூன்று பேரக்குழந்தைகள் உள்ளனர். அவர் தற்போது வாழ்க்கை பயிற்சியாளராகவும் எழுத்தாளராகவும் பணியாற்றி வருகிறார்.
அன்பைக் காட்டவும் அன்பைப் பெறவும் வயது ஒரு தடையில்லை என்பதை இந்த மூதாட்டி உலகிற்கு நிரூபித்துள்ளார்.
Follow us
Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram |Android app|