கதையோடு English – Part 02
கதையின் நேற்றைய பகுதியில் “அவள் என்னை பார்க்கிறாள்” என்று என் நண்பன் சொன்னான்
அதற்கு நான்,
“What do you mean?”
நீ என்ன சொல்ற?
ஆமா, “She smiled at me”
அவள் என்னைப் பார்த்து சிரித்தாள்…. என்று பதில் அளித்தான்.
இது ஒரு simple paste tense ஆகும். காரணம் செயல் முடிந்துவிட்டது. செயல் முடிந்த நேரங்களில் நீங்கள் simple paste காலத்தை பயன்படுத்தலாம்.
கடந்த காலத்தில் ஒரு முழுமையாக நடந்து முடிந்த செயலைப் பற்றி பேச The simple past tense பயன்படுத்தப்படுகிறது.
Formula : Subject + past tense verb + object
அவனுடைய பதிலை கேட்டு…
I was somewhat taken aback by her action.
அவளுடைய செயலால் நான் சற்றே அதிர்ச்சியடைந்தேன்.
somewhat ஓரளவு, சற்றே
aback வியப்புண்டாக்கு
சிறிது நேரம் அமைதி காத்து நிதானமாக அவனுக்கு பதில் அளித்தேன்.
“She might have looked accidentally at you and smiled”
“அவள் தற்செயலாக உன்னைப் பார்த்து புன்னகைத்திருக்கலாம்”
I said that, என்று நான் சொன்னேன்.
You use might have with a past participle to indicate that it is possible that something happened or was true, or when giving a possible explanation for something.
கடந்தகாலத்தில் ஒரு விஷயம் ஏதேனும் நடந்திருக்கலாம் அல்லது உண்மையாக இருக்கலாம் அல்லது ஏதாவது ஒரு சாத்தியமான விளக்கத்தை அளிக்கும்போது might have + past participle நீங்கள் இந்த formula வை பயன்படுத்தலாம்.
“சத்தியமா சொல்றேன் அவ என்ன பாத்து தான் சிரிச்சா” , என்று குருட்டு நம்பிக்கையோடு கூறினான்.
ஆனால் எனக்கு என்னவோ, சிரிப்பதெல்லாம் காதலாக புரிந்துகொண்டு, புதிதாய் பிறந்த கண்ணு குட்டி போல அவன் துள்ளி குதித்தான் என்று தோன்றியது. அதன் பிறகு
“Whatever I say he doesn’t heed of that”
நான் என்ன சொன்னாலும் அவன் காது கொடுத்தே கேக்கல
heed – to pay attention to something, especially advice or a warning:
குறிப்பாக ஆலோசனை அல்லது எச்சரிக்கைளை கவனம் செலுத்துவது :
We all know what falling in love does to us.
காதலில் விழுவது நமக்கு என்ன செய்யும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
falling in love – காதலில் விழுதல்
Subject என்பது single word மட்டும் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை இப்படி group of words ஆகவும் இருக்கலாம். falling in love இது third person singular subject என்பதால் do பதிலாக does பயன்படுத்தி இருக்கிறோம்.
சிறிது நேரம் கழித்து, “சரி” என்று நான் அவனிடம்…
“What should I do now?”
நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?
“I asked him”
நான் அவனிடம் கேட்டேன்.
Do you have her mobile number? He asked me.
உன்கிட்ட அவ போன் நம்பர் இருக்கா, என்று என்னிடம் கேட்டான்
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
Falsehood may take the place of truthful word,
If blessing, free from fault, it can afford.
Falsehood – பொய்
இந்த குறள் என் நினைவுக்கு வர, அவனுக்கு அவளுடைய கைபேசி எண்ணை தர என் மனம் ஏனோ தயாராக இல்லை, என்பதை புரிந்து கொண்டு
“How do I know her number?”
அவ நம்பர் எனக்கு எப்படி தெரியும்? என்று நான் கேட்டேன்
அதற்கு அவனோ,
“I thought you might have known her number”
அவ நம்பர் உனக்கு தெரிஞ்சிருக்கும்ன்னு நான் நினைச்சேன். He said, அவன் சொன்னான்.
ஆனால் அவனைப் பற்றி எண்ணங்கள் என் மனதில் ஓடின.
He is a womanizer, an alcoholic and jobless
அவர் ஒரு பொம்பளபொறுக்கி, குடிகாரன் மற்றும் வேலையில்லாதவன்.
கதையோடு English…. தொடரும்.
கதையோடு English – part – 03 : https://lifeneeye.com/spokeneng/kathaiyodu-english-part-03/
100 Days Spoken English course through WhatsApp
🕓 தினமும் 20 நிமிடங்கள் படித்தால் போதுமானது
🧏♂️ கதை வடிவில் பாடங்கள்
🤷♀️ எளிமையான இலக்கணம் பற்றி விளக்கங்கள்
📅 தினமும் தேர்வுகள்
👨👨👧👧 பயிற்சி செய்ய Telegram குரூப் சேட்
for more details contact : https://wa.me/918610924459